News April 10, 2025
ஹாலிவுட் நடிகர் மெல் நோவாக் காலமானார்!

பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் மெல் நோவாக் (93) வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர், புரூஸ் லீயுடன் ‘Game of Death’ படத்திலும், ‘Eye for an eye’, ‘Black Belt Jones’ போன்ற ஆக்ஷன் படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். இவரின் மறைவு செய்தியை அவரது மகள் உறுதிப்படுத்தியுள்ளார். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 21, 2025
‘சிக்கன் 65’ பெயர் வந்தது எப்படி தெரியுமா?

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவு ‘சிக்கன் 65’. அதை விரும்பி சாப்பிடும் பலருக்கும் அதன் பெயர் காரணம் தெரியாது. உண்மையில் இந்த பெயர் வந்தது தமிழகத்தில் இருந்து தான். 1965-ல் சென்னை புஹாரி ஹோட்டல் உரிமையாளர் AM புஹாரி தான், இதை முதலில் அறிமுகப்படுத்தினார். மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை புதிய டிஷ் ஆக அறிமுகம் செய்த அவர், அந்த ஆண்டை வைத்து ‘சிக்கன் 65’ என்று குறிப்பிட அது பிரபலமாகிவிட்டது.
News November 21, 2025
ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.


