News April 4, 2025
ஈரோடு மாவட்டத்திற்கு விடுமுறை

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, வரும் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் 26ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.
Similar News
News April 11, 2025
BREAKING: சிஎஸ்கே அணி பேட்டிங்

சென்னையில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. சென்னை அணிக்கு தோனி தலைமை வகிக்கிறார். போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா? இல்லை கொல்கத்தா அணி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்க.
News April 11, 2025
ரயில்களில் முதியோருக்கு தனி இடஒதுக்கீடு உண்டா?

ரயில்களில் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அவர்களில் முதியோரும் அடங்குவர். அவர்களுக்கு ரயில்களில் தனி இடஒதுக்கீடு எதுவும் இல்லை. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது, கீழ் இருக்கையில் முதியோருக்கே முதல் முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்காக அனைத்து ரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 2 கீழ் இருக்கை டிக்கெட்டுகள் முதியோருக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும்.
News April 11, 2025
டாஸ்மாக்கில் 5 புதிய பீர்கள் விரைவில் அறிமுகம்

டாஸ்மாக் கடைகளில் 5 புதிய பீர்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கோடைகாலத்தில் மது பிரியர்களை ஈர்க்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆந்திர நிறுவன தயாரிப்பான “பிளாக் பஸ்டர்” பீர் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக நிறுவன தயாரிப்புகளான “பிளாக் போர்ட்”, “உட்பெக்கர்” உள்ளிட்ட 5 பீர்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.