News August 23, 2025
நகை கடன்.. மக்களுக்கு முக்கிய தகவல்

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
Similar News
News January 20, 2026
ஜன நாயகன் ரிலீஸ்: ஐகோர்ட் சரமாரி கேள்வி

ஜன நாயகன் வழக்கை விசாரித்த சென்னை HC அமர்வு, U/A சான்றிதழ் தர முடிவு செய்துவிட்டு அதனை மாற்றியது ஏன் என தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், படத்தை பார்த்துவிட்டு யார் புகார் கடிதம் எழுதியது என்ற கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும், இன்றே தீர்ப்பளிக்கும் வேண்டும் என்ற SC-ன் உத்தரவையும் சுட்டிக்காட்டிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடரவுள்ளது.
News January 20, 2026
லஞ்சம் பெற்றதற்கு CM உடந்தையா? அண்ணாமலை

அமைச்சர் KN.நேருவுக்கு எதிராக ED மூன்றாவது அறிக்கை சமர்ப்பித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு CM கொடுப்பதற்கு 2 விளக்கங்கள் மட்டுமே உள்ளதாக கூறிய அவர், ஒன்று ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என சொல்லவேண்டும் (அ) இதற்கு தானும் முழு உடந்தை என ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மேலும், திமுக ஆட்சியின் நிர்வாகம் சீரழிந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News January 20, 2026
BREAKING: கூட்டணி முடிவு.. விஜய்க்கு அதிர்ச்சி

பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள <<18905172>>நிதின் நபினுக்கு<<>>, TTV தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது NDA கூட்டணியில் அமமுக இணைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, தவெகவுடன் அமமுக கூட்டணி வைக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக NDA பக்கமே TTV பார்வை மாறியிருப்பதால், விஜய் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.


