News October 16, 2025
கனமழை.. முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக முதல் மாவட்டமாக நெல்லைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று பல மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டதால், அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 16, 2025
தீபாவளி விடுமுறை.. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையிலிருந்து 760 சிறப்பு பேருந்துகள், பிற மாவட்டங்களுக்கு இடையே 565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மழைகாலம் தொடங்கிவிட்டதால், தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் உடனே புக்கிங் செய்யவும்.
News October 16, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (அக்.16) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து 82,972 புள்ளிகளிலும், நிஃப்டி 109.10 புள்ளிகள் அதிகரித்து 25,433 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ITI, Whirlpool, Titan ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், HDFC Life Insurace உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.
News October 16, 2025
RECIPE: தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி?

தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பை, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கிராம்பு (தலா 50 gm) *செய்முறை: இவை அனைத்தையும் வறுத்து, அரைக்கவும். வாணலியில் வடிக்கட்டிய வெல்லப் பாகினை ஊற்றி, அதில் அரைத்த பொருள்களை சேர்த்து நன்கு கிளறவும். சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டுக் கிளறினால் தீபாவளி லேகியம் ரெடி. SHARE IT.