News August 7, 2024
இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை & அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 3 மணிநேரமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக திருச்சி, சேலம், குமரி, நெல்லை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய (30 – 40 கி.மீ., வேகத்தில்) மழையும், வேலூர், கடலூர், காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது.
Similar News
News October 31, 2025
மத்திய அரசில் 2,623 பணியிடங்கள்.. முந்துங்க!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦வயது: 18- 24 ✦கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ITI, ஏதாவது ஒரு டிகிரி ✦தேர்ச்சி முறை: Merit List & Certificate Verification ✦சம்பளம்: ₹8,200- ₹12,300 வரை ✦முழு விவரங்களுக்கு <
News October 31, 2025
மீண்டும் புயல் சின்னம்.. கனமழை வெளுக்கப் போகுது

மத்திய கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கடந்த வாரம் மொன்தா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதால், நவ.6-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
TTV, OPS, KAS கூட்டு ஒரு நாள் பரபரப்பு: RB உதயகுமார்

TTV, OPS, செங்கோட்டையன் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை அறிவித்துள்ளனர். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த RB உதயகுமார், அவர்கள் 3 பேரும் சேர்ந்தது ஒருநாள் பரபரப்பு என்று விமர்சித்துள்ளார். அதை கூடுதல் பரபரப்பாக்காமல் இருந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறிய அவர், இதுபோன்று நடப்பது புதிதல்ல எனக்குறிப்பிட்டார்.


