News August 24, 2025
Health Tips: உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க

உடற்பயிற்சி செய்துவிட்டு வந்தவுடன் சர்க்கரை பொருள்களை உட்கொண்டால் செய்த உடற்பயிற்சிக்கு பலன் இருக்காது. இதனால் உடற்பயிற்சிக்கு பின் சர்க்கரையை போலவே மது, காரமான உணவு, சர்க்கரை சேர்த்த பழச்சாறு, Junk Foods சாப்பிடுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக, புரதச் சத்து அதிகமுள்ள உணவு, Sweet Potato, பழங்கள், காய் கறிகளை உண்ணலாம். நீங்க தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா?
Similar News
News March 15, 2026
FLASH: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்!

5 மாநிலங்களில் 2,18,807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. TN-ல் நகரங்களில் 30,967, கிராமப்புறங்களில் 44,065 என மொத்தமாக 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன. சராசரியாக 756 பேருக்கு ஒரு வாக்குசாவடி அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டம் வருசநாடு மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு 3 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். SHARE IT.
News March 15, 2026
5 மாநில தேர்தல்.. முக்கிய அறிவிப்பு

TN, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த வாக்காளர் எண்ணிக்கையானது தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 20 நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் இந்த 5 மாநில தேர்தல் திருவிழாவை காண வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News March 15, 2026
ஸ்டாலின் அரசு ஃபெயில் ஆகிவிட்டது: குஷ்பு

TN-ல் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக குஷ்பு குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து, வெறும் விளம்பரங்களில் மட்டுமே திமுக அரசு குறியாக இருப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்பில் CM ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முற்றிலும் ஃபெயில் ஆகிவிட்டதாகவும் தனது X பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


