News August 19, 2024
முன்னர் செய்ததை மறந்ததா காங்கிரஸ்?

அரசு பணியிடங்களை Lateral Entry மூலம் நேரடி நியமனம் செய்யும் முறையை காங்., தலைமையிலான UPA அரசு தான் கொண்டு வந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது UPSC மூலம் வெளிப்படைத் தன்மையுடன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 45 பணியிடங்களுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டை பறிக்கும் செயல் என ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.
Similar News
News January 28, 2026
வழுக்கை விழாமல் தடுப்பது எப்படி?

➤ஒரு நாளுக்கு குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர் ➤வாரத்திற்கு 2 முறை வெந்தயத்தை ஊற வைத்து, பேஸ்ட் போல் அரைத்து தலை முடியில் தடவிய பின் குளிக்கவும் ➤அதிகம் கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை கொண்டு ஹேர் வாஷ் செய்யவும் ➤ஈரமாக இருக்கும் முடியை சீப்பை கொண்டு சீவுவதை நிறுத்தி கொள்ளுங்கள் ➤தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் ➤அதிகமாக Stress ஆகவேண்டாம். SHARE.
News January 28, 2026
காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை(ஜன.29) உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரவி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக, பிப்.7-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.
News January 28, 2026
எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்: நயினார்

செங்கோட்டையனை நினைத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். செங்கோட்டையனை 30 ஆண்டுகளாக தெரியும் என்ற அவர், KAS-ஐ முழுவதுமாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் வருத்தப்படுகிறேன் என்றார். மேலும், அரசியலில் ஒரு காலத்தில் எப்படி இருந்த செங்கோட்டையன், தற்போது இப்படி ஆகி விட்டாரே எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.


