News September 12, 2024

Happy Birthday: கவலையைப் போக்கிய கைப்புள்ளை!

image

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனிப்பெரும் கலைஞன் வடிவேலுவுக்கு இன்று பிறந்தநாள். கைப்புள்ள, வண்டுமுருகன், வீரபாகு, நேசமணி, என தனது திரைப்பட கதாபாத்திரங்கள் வழியே தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவே மாறிவிட்டவர். சிரிக்க வைக்கும் கலைஞனால் எளிதாக அழ வைக்கவும் முடியும் என நிரூபித்த சார்லி சாப்ளின் வழியில் கலையுலகில் பயணித்த அவர் நடித்து உங்களுக்குப் பிடித்த படத்தைக் கமெண்ட்டில் சொல்லுங்க!

Similar News

News August 19, 2025

Food Poison-இல் முடிந்த ஷூட்டிங் ஹாஸ்பிடலில் 120 பேர் அனுமதி!

image

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ பட ஷூட்டிங் காஷ்மீரின் லே லடாக் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இரவு உணவு சாப்பிட்ட 600 பேரில், பலருக்கு வாந்தி, மயக்கம் & வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 120 பேர் உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.

News August 19, 2025

கம்யூ., கட்சிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்: முத்தரசன்

image

கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை என சிபிஐ செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சிபிஐ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியை தேய்ந்து போன கட்சி என விமர்சிக்கும் அவர், கூட்டணிக்காக மட்டும் எதற்காக ரத்தினக் கம்பளம் விரிப்பதாக கூறுகிறார் என்றார்.

News August 19, 2025

ஜான் பாண்டியன் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறது

image

அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடவில்லை. 2021-ல் ADMK கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024-ல் BJP கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். இதனால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய EC முடிவு எடுத்துள்ளது.

error: Content is protected !!