News December 5, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (டிச.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News December 21, 2025
சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தானது: திருமா

மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்ப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளார்.
News December 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. வெளியான ஹேப்பி நியூஸ்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாமாயிலுக்கு வழங்கப்படுவதைப்போல், தேங்காய் எண்ணெய்க்கு ₹100 மானிய தொகை வழங்கினால் விலை குறையும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வது குறித்து CM ஸ்டாலினிடம் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார்.
News December 21, 2025
தேமுதிக கூட்டணி முடிவு இதுவா?

தேமுதிக கிட்டத்தட்ட கூட்டணியை ஃபிக்ஸ் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, திமுக-அதிமுக என இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக பேசப்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளுமே MP சீட் தர ஒப்புக்கொண்டாலும், அதிக சீட்களை ஒதுக்குவதாக அதிமுக வாக்கு கொடுத்திருக்கிறதாம். இதனால் தேமுதிகவை அவர்கள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.


