News October 13, 2025
20 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பு

காசா அமைதிக்கான உச்சி மாநாடு, இன்று எகிப்தில் நடைபெறுகிறது. முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, 20 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது. ஏற்கெனவே 20 பணயக் கைதிகளின் பட்டியல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் காசாவிலிருந்து ரெட் கிராஸ் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
Similar News
News October 13, 2025
கரூர் வழக்கில் SC தீர்ப்பு நியாயமானது: ADMK

கரூர் துயர வழக்கில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள SC, அதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்நிலையில், இதனை வரவேற்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள SC உத்தரவை வரவேற்பதாக அதிமுகவின் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு திருப்பம்

கரூர் வழக்கில் CBI விசாரணை கோரி SC-ல் தாக்கல் செய்த மனுவில் தெரியாமல் கையொப்பமிட்டதாக மனைவியை இழந்த செல்வராஜ் கூறியுள்ளார். அதேபோல், சிறுவனை இழந்த பெண், தங்களுக்கு தெரியாமல் மோசடியாக வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, CBI விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மோசடி என தெரியவந்தால் தீர்ப்பு ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக திமுக MP வில்சன் கூறியுள்ளார்.
News October 13, 2025
மோசடி என தெரிந்தால், கரூர் தீர்ப்பு ரத்தாக வாய்ப்பு: வில்சன்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும் என்று வில்சன் தெரிவித்துள்ளார். SC தற்போதைய ஆணையை மட்டுமே வழங்கி இருக்கிறது; இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறினார். மேலும், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால், நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.