News February 25, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஞானேஷ் குமார்

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் நீராடியது உணர்வுப்பூர்வமாகவும், மனநிறைவை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News February 25, 2025
போலீஸ் வேலை.. கல்வித் தகுதியை உயர்த்த பரிந்துரை

தமிழக காவல்துறையில் கான்ஸ்டபிள்களாக சேர தற்போது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி உள்ளது. இந்நிலையில், தமிழக காவல்துறை 5ஆவது ஆணையம் CM ஸ்டாலினிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் குறைந்தபட்ச கல்வியை 12ஆம் வகுப்பு தேர்ச்சியாக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், கான்ஸ்டபிள் வேலைக்கு ஆள் எடுக்கையில் 20% தமிழ் மீடியத்தில் படித்தோரை தேர்வு செய்யும்படியும் பரிந்துரைத்துள்ளது.
News February 25, 2025
ஹிந்தி கற்றால் என்ன? கிருஷ்ணசாமி

ஏழைக் குழந்தைகள் ஹிந்தியை கற்றால் திமுகவிற்கு என்ன கஷ்டம் வரப்போகிறது என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழியை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம் எனவும், ஹிந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்பு மொழியை வைத்து அரசியல் செய்தது திமுகவிற்கு கைகொடுத்திருக்கலாம், ஆனால் இது AI காலம் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 25, 2025
விலைகளை உயர்த்தப் போகும் நெஸ்லே

நெஸ்லே நிறுவனம் தனது தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. காபி, கோகோ, எண்ணெய் விலைகளின் உயர்வு காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும், அதிகரித்துவரும் விலைவாசி, பணவீக்கம் காரணமாக நுகர்வு குறைந்துள்ளதால் கடைசி காலாண்டு லாபமும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நெஸ்லே தயாரிப்புகளில் மேகி, செர்லாக், கிட்காட், மைலோ, நெஸ்கபே முக்கியமானவை.