News November 28, 2024

அரசு நடத்தும் முகாம்: 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு…

image

தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நவ. 31ல் வேலூர், திருச்சியில் நடைபெறுகிறது. குடியாத்தம் தரணம்பேட்டை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில் நுட்பப் பயிலகத்திலும் (SIT) முகாம்கள் நடைபெறுகின்றன. 30 ஆயிரம் காலியிடங்களுக்கு 8ம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

Similar News

News January 18, 2026

NDA கூட்டணியில் தேமுதிக, அமமுகவா? நயினார் விளக்கம்

image

ஜன.23, மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக கூட்டத்தில், NDA-வின் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரத்தை PM மோடி தொடங்கி வைக்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ‘திமுகவை வீட்டிற்கு அனுப்புங்கள்’ என்ற முழக்கத்துடன் PM மோடி தனது பிரசார உரையை ஆற்றுவார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமமுக, தேமுதிக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்பதற்கான விடையும் அதேநாளில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 18, 2026

நான் இருப்பதே திமுகவுக்கு மறந்துபோச்சு: சசிகலா

image

MGR-ஜெயலலிதா ஆட்சி மட்டும் தான் உண்மையான மக்களாட்சி என சசிகலா தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், திமுக ஆட்சியில் வெறுமென பேச்சில் மட்டுமே மக்களாட்சி இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லையென திமுக நினைப்பதாகவும், ஆனால் தான் இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் உண்மை நிலவரத்தை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 18, 2026

BREAKING: விஜய் தரப்புக்கு அடுத்த சம்மன் அனுப்பிய CBI

image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு CBI சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நாளையும் விஜய் ஆஜராக உள்ளார். இந்நிலையில், மீண்டும் தங்கள் தரப்புக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் விஜய் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!