News August 19, 2024
ஆளுநர் ரவி அவசர டெல்லி பயணம்

ஆளுநர் ரவி இன்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். அவரது பதவிக்காலம் ஜூலை 31ல் நிறைவடைந்தது. பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இதுவரை அறிவிப்பு வரவில்லை. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படாததால், அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கிறார். இந்நிலையில், பதவி நீட்டிப்பு குறித்து டெல்லியில் மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்துப்பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News April 2, 2026
ராசி பலன்கள் (02.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News April 2, 2026
EPS போல கட்சியை அடகு வைக்கவில்லை: ஸ்டாலின்

வாஜ்பாயுடன் கருணாநிதி இருக்கும் போட்டோவை காட்டி, பாஜகவுடன் கூட்டணி வைத்த<<19538821>> கருணாநிதி சங்கியா<<>> என EPS கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தவிர கட்சியை அடகு வைக்கவில்லை என்றார். புலனாய்வு புலி போல அந்த போட்டோவை காட்டும் EPS, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் சொல்வது போல் மணிக்கொருமுறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபிக்கிறார் என சாடியுள்ளார்.
News April 2, 2026
BREAKING: டிக்கெட் கட்டணம் ₹10,000 உயருகிறது

விமான எரிபொருள் விலை 2 மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது. ஏப்ரல் 2 முதல் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பயண தூரத்தைப் பொறுத்து, உள்நாட்டு விமானங்களில் எரிபொருள் கட்டணம் ₹275 – ₹950 வரையிலும், சர்வதேச சேவைகளில் ₹900 – ₹10,000 வரையிலும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


