News October 11, 2025
குணமடைந்தார் நல்லக்கண்ணு

மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வயது மூப்பினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் பல நாள்களாக செயற்கை சுவாச சிகிச்சையிலும், தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்த அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். முன்னதாக, தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நல்லக்கண்ணு நன்றி தெரிவித்தார்.
Similar News
News October 11, 2025
கமலுக்கு அடுத்து ஹரிஷ் கல்யாண் தான்..

தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து மிக Handsome ஆன நடிகர் ஹரிஷ் கல்யாண் தான் என மிஷ்கின் தெரிவித்துள்ளார். ‘டீசல்’ டிரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சியில், இன்னும் 10 வருடத்தில் டாப் ஹீரோவாகவும் ஹரிஷ் கல்யாண் மாறிவிடுவார் என்றும் மிஷ்கின் கூறினார். மேலும், வெவ்வேறு கேரக்டரில் நடித்து தன்னை நடிகராக ஹரிஷ் கல்யாண் உயர்த்திக் கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்தார். ஹரிஷ் கல்யாண் டாப் ஹீரோ ஆகுவாரா?
News October 11, 2025
அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

அதிகமாக தண்ணீர் குடிப்பதும், உடல் நலத்திற்கு தீங்கானது என ICMR ஆய்வில் தெரியவந்துள்ளது *அதிகளவு தண்ணீரை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகம் அழுத்தத்திற்கு ஆளாகிறது *அதிகமாக தண்ணீர் வெளியேறுவதால், ஹார்மோன் எதிர்வினை நிகழ்ந்து, உடல் சோர்வடைகிறது *அதிக தண்ணீர் வெளியேறுவதால், உடலில் உள்ள சோடியம் & பிற எலக்ட்ரோலைட்டுகளை நீர்த்துப்போகும். ஒரு நாளில், 3- 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். SHARE IT.
News October 11, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹680 குறைந்த நிலையில், இன்று(அக்.11) ₹680 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,425-க்கும், சவரன் ₹91,400-க்கு விற்பனையாகிறது.