News April 22, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,290-க்கும் ஒரு சவரன் ₹74,320-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
News April 22, 2025
மக்களுக்கு இலவச ‘ஏசி’ திட்டம்?

‘PM மோடி ஏசி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதில், நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால், சுமார் 1.50 கோடி குடும்பங்களுக்கு இலவச ‘5 ஸ்டார் ஏசி’யை மே மாதம் முதல் மத்திய அரசு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்ற தகவலை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.
News April 22, 2025
2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 8 தனியார் பல்கலைக்கழங்கள் தொடர்பான தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு பொது சட்ட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.