News March 28, 2024

ரூ.50 ஆயிரமாக அதிகரித்தது தங்கம் விலை

image

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.50,000ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,215ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,720ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் கிராம் தங்கம் விலையில் இன்று ரூ.35 அதிகரித்து ரூ.6,250ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280 உயர்ந்து , ரூ.50,000ஆக அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 11, 2026

பெரும்பாக்கம்: தாய், மகள் துடிதுடித்து பலி!

image

சென்னை: பெரும்பாக்கம், சேகரன் நகரை சேர்ந்தவர் புனீஷ் (38). இவரது மனைவி லாவண்யா (35). இவர்களின் மகள் இனியா (13), பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 10) காலை பைக்கில் மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

News March 11, 2026

தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

image

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

News March 11, 2026

IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

image

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!