News March 28, 2024
ரூ.50 ஆயிரமாக அதிகரித்தது தங்கம் விலை

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.50,000ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,215ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,720ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் கிராம் தங்கம் விலையில் இன்று ரூ.35 அதிகரித்து ரூ.6,250ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280 உயர்ந்து , ரூ.50,000ஆக அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 30, 2025
N ஆனந்த் மீது ஆக்ஷன் எடுக்கவுள்ளாரா விஜய் ?

தவெகவில் N.ஆனந்திடம் இருக்கும் அதிகாரத்தை பிரித்துக் கொடுப்பது என்கிற முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால், ஆனந்தின் ஆதரவு நிர்வாகிகள் மாற்றப்படலாம். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் பிரித்துக் கொடுக்கப்படலாம் என்கின்றனர். மேலும் கட்சியின் உள்கட்டமைப்பை மொத்தமாக மாற்ற விஜய் முடிவு செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
News October 30, 2025
தமிழகத்திற்கு வருகிறது ஆபத்து!

தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர், டிசம்பரில் தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே ‘Montha’ புயல் உருவானது. இந்நிலையில், இந்திய பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகளால், எதிர்மறை நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனால், 2019-ம் ஆண்டு போல, பல தீவிர மற்றும் அதி தீவிர புயல்கள் உருவாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
News October 30, 2025
கூலி படத்தை வறுத்தெடுத்த பாக்யராஜ்

PAN Indian படம் என்பதற்காக அந்தந்த ஊரில் இருந்து ஸ்டார்களை இறக்கினால் மட்டும் படம் ஓடுமா என பாக்யராஜ் விமர்சித்திருக்கிறார். என்னதான் PAN இந்தியா படம் என்றாலும், கதை இருந்தால்தானே படம் ஓடும் எனவும், இல்லையென்றால் எவ்வளவு பட்ஜெட் போட்டாலும் பிரயோஜனம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், கூலி படத்தை தாக்கி பேசிய அவர் ஆமிர்கான் கூட அந்த படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டார் என்று கூறியுள்ளார்.


