News October 11, 2025
கடன் தொல்லை நீங்க… சனிக்கிழமை இத செய்யுங்க

ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடனிருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் (எ) சக்கரத்தாழ்வார். வாழ்வில் ஒளிதரும் அவரது திருவருள் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கை அமையுமாம். சனிக் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, 12 முறை வலம் வந்து ‘ஸ்ரீசுதர்சன மஹா’ மந்திரம் பாடி மனமுருகி வேண்டினால் கடனால் உண்டான சங்கடம் நீங்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM கிசான் 21-வது தவணை தொகை, இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட் மாநில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில விவசாயிகளுக்கு அக்.18-ம் தேதி வாக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், விவசாயிகள் தீபாவளி கொண்டாட உதவும் வகையில் ₹2,000 தவணைத் தொகையை இன்னும் முன்கூட்டி (அடுத்த வாரம்) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 11, 2025
இதயத்தை காக்க இதை செய்யுங்கள்

அலுவலகமோ, அபார்ட்மெண்ட்டோ மாடிப்படியை தவிர்த்து, லிப்ட் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு தான். தினசரி மாடிப் படிக்கட்டுகளில் ஏறுவது மாரடைப்பு ஆபத்தை 20% வரை குறைக்கிறதாம். துலேன் பல்கலை., 4,50,000 பேரிடம் நடத்திய ஆய்வின்படி, தினமும் குறைந்தது 50 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இதய, சுவாச ஃபிட்னஸ் & லிப்பிட் செயல்பாடுகளை மேம்படுத்தலாம். இதனால் மாரடைப்பு ஆபத்து குறையும். SHARE IT!
News October 11, 2025
தூக்க முடியாத மனிதன்.. இவரை தெரியுமா?

கனடிய-அமெரிக்க குத்துச்சண்டை வீரரான ஜானி கூலன், தூக்க முடியாத மனிதனாக வலம் வந்துள்ளார். அவரது எடை வெறும் 55 கிலோ மட்டுமே. ஆனால், முகமது அலியால் கூட தூக்க முடியவில்லை. அவரை விட பெரிய உருவம் கொண்ட பலரும் அவரை தூக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளனர். ஜானி, தனது ரகசியத்தை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. இந்த தகவல் உங்களை ஆச்சரியப்பட வைத்ததா? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.