News December 2, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

1) ஃப்ரெட்ரிக் க்ரான்ஸ்டெட் நிக்கல் உலோகத்தை கண்டுபிடித்தார் 2) இயேசுவின் தாய் மொழி – அரமேயம் 3) இந்தியாவின் முதல் பெண் மின்சார பொறியாளர் – அய்யாலசோமயாஜுலா லலிதா 4) முயலின் அறிவியல் பெயர் – Oryctolagus cuniculus 5) POTA – Prevention of Terrorism Act 6) வெப்பக்கதிர் வீச்சை அளக்க உதவும் கருவி – Radiomicro meter 7) அஞ்சுகம் என்ற சொல் கிளியை குறிக்கும். 8) தென் கொரியாவின் தேசிய மலர் – முகுங்வா.
Similar News
News August 22, 2025
மேற்கு ஆசிய மோதல்கள்: மேக்ரான் உடன் மோடி பேச்சு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் PM மோடி தொலைபேசியில் உரையாடினார். வாஷிங்டனில் ஐரோப்பா, உக்ரைன், USA தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடலின் முக்கிய கருத்தை மேக்ரான் பகிர்ந்ததாக மோடி கூறியுள்ளார். உக்ரைன் & மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஆதரவை இந்தியா தொடர்ந்து வழங்கும் என மோடி உறுதியளித்தார். இரு நாடுகளிடையேயான மூலோபய கூட்டாண்மை குறித்தும் பேசினர்.
News August 22, 2025
தவெக மாநாட்டில் சோகம்.. தொண்டர்கள் மரணம்

மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 22, 2025
Dream 11 கேமுக்கு தடை

ஆன்லைன் கேமிங் மசோதா-2025 நிறைவேறிய நிலையில், Dream 11 கேம் நிறுத்தப்படும் என டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை கேம்களையும் நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. FanCode, DreamSetGo, மற்றும் Dream Game Studios ஆகியவை மட்டும் செயல்படும். 2024-ல் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈட்டிய ₹9,600 கோடி வருமானத்தில் 90% Dream 11-ல் இருந்தே கிடைத்ததாம்.