News September 30, 2025
லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு

லண்டனின் டவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை அவமதித்ததற்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது அகிம்சை மற்றும் காந்தியின் மரபு மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் என்றும் எதிர்ப்பை X தளத்தில் பதிவு செய்துள்ளது. இந்த வெட்கக்கேடான செயல், காந்தியின் பிறந்தநாளுக்கு 3 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நாசவேலை என்றும் கடுமையாக இந்திய தூதரகம் விமர்சித்துள்ளது.
Similar News
News January 19, 2026
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்!

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என அம்மாநில EC அறிவித்துள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துவது தவறில்லை என்றும், EVM-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது எனவும் தேர்தல் அதிகாரி சங்க்ரேஷி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு EVM பயன்படுத்தலாம் என பாஜக கோரிக்கை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மே 25-க்கு பிறகு தேர்தல் நடைபெறவுள்ளது.
News January 19, 2026
இதுகூட ஸ்டாலினுக்கு தெரியாதா? அண்ணாமலை

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என CM-க்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர் என்றும், இதனால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்கள் என்பது கூட, ஸ்டாலினுக்கு தெரியாதா எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
காற்றின் மூலம் பவர் சப்ளை! அசத்திய விஞ்ஞானிகள்

பின்லாந்து விஞ்ஞானிகள் கம்பிகள் இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்தி புதிய சாதனை படைத்துள்ளனர். Helsinki மற்றும் Oulu பல்கலைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் மற்றும் லேசர் பீம்களின் உதவியுடன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மின்சாரத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர். சோதனை நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் கம்பிகளின் தேவையை குறைக்கும் என கூறப்படுகிறது.


