News April 1, 2025

ரூ.92 லட்சத்துடன் இலவச வீடு… ஆனா ஒரு கன்டிஷன்!

image

இலவசமாக வீடு, ரூ.92 லட்சத்தை யாரேனும் சும்மா தருவதாக சொன்னால் வாங்கிக் கொள்ள கசக்குமா என்ன? இந்த ஆஃபரைத் தருவது இத்தாலி அரசு. ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள 33 கிராமங்களில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கே இந்த சலுகை. எந்த நாட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசிக்க வேண்டுமாம். கிராமங்களை விட்டு நகரத்திற்கு குடிபெயர்வதை தடுக்கவே இந்த முயற்சியாம். சூப்பர்ல!

Similar News

News April 2, 2025

அதிமுக – பாஜக மீண்டும் மீண்டும் சந்திப்பு

image

பாஜக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை டெல்லியில் அமித் ஷாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்தார். அதேபோல, நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்து பேசினார். கடந்த வாரம் EPS அமித் ஷாவை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2025

எந்த நேரம், எதற்கு நல்லது?

image

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம். *5am-7am:பெருங்குடல் நச்சுநீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். ரிலாக்ஸாக இருங்கள்.

News April 2, 2025

ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

image

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!