News December 5, 2024
ISROவில் இலவச சைபர் பாதுகாப்பு பயிற்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கல்லூரி மாணவர்களுக்கான 2 வார கால இலவச சைபர் செக்யூரிட்டி பயிற்சி வகுப்பு நடந்த உள்ளது. இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பு, வரும் 9 – 20ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பங்கேற்கலாம். இணைய வழியில் தகவலை பாதுகாப்பது குறித்து செயல்முறையாக விளக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க <
Similar News
News September 16, 2025
மேகாலயாவில் 8 அமைச்சர்கள் ராஜினாமா

மேகாலயா அமைச்சரவையில் மாற்றம் நிகழவுள்ளதால் அதற்கு ஏதுவாக, 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அம்மாநிலத்தின் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சரவையில், 8 புதிய அமைச்சர்கள் ராஜ் பவனில் மாலை 5 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்ட அமைச்சர்கள் கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
News September 16, 2025
துணை ஜனாதிபதியை சந்தித்தார் இபிஎஸ்

டெல்லியில் துணை ஜனாதிபதியை இபிஎஸ் சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், சிபி ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளார்.
News September 16, 2025
யுவராஜ், உத்தப்பாவுக்கு ED சம்மன்!

சட்ட விரோத சூதாட்ட விளம்பர வழக்கில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் & ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. அதில், உத்தப்பா வரும் 22-ம் தேதியும், யுவராஜ் சிங் வரும் 23-ம் தேதியும் நேரில் ஆஜராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் வீரர்கள் சுரேஷ் ரெய்னா & ஷிகர் தவான் உள்பட நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி, ஊர்வசி ஆகியோரும் விசாரிக்கப்பட்டிருந்தனர்.