News March 30, 2024
தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது

தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
வெள்ளகோவிலில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

வெள்ளகோவிலைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பழனிவேல். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, முன் சென்று கொண்டிருந்த பைக் மீது இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் பழனிவேல் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


