News August 26, 2024

ஃபாக்ஸ்கான் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை

image

ஃபாக்ஸ்கான் நிறுவன வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும் என, அதன் தலைவர் யங் லியு கூறியுள்ளார். வேலை வாய்ப்பு வழங்குவதில் தங்கள் நிறுவனம் பாலின பாகுபாடு பார்ப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் பெண்கள் முன்னணி வகிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். TNஇல் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஆலை உள்ளது.

Similar News

News July 11, 2025

காலையில் இத பண்ணுங்க…

image

நல்ல தூக்கம் மட்டுமின்றி, காலையில் செய்யும் ஒரு சில விஷயங்கள், அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
*வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும் *சுறுசுறுப்பாக இருக்க, உடற்பயிற்சி செய்யுங்க *தியானம், மன அமைதிக்கு உதவும் *எந்த காரணத்திற்கும் டிபனை உட்கொள்ளாமல் இருக்க வேண்டாம். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

News July 11, 2025

பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

image

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!