News February 22, 2025
முன்னாள் ராணுவ துணைத் தளபதி காலமானார்

இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி மோதி தார் காலமானார். 1995 முதல் 1996 வரை துணை ராணுவத் தளபதியாக பதவி வகித்துள்ள அவர், அதற்கு முன்பு தென்பிராந்திய படைகளின் தளபதியாக 1994-1995 வரை இருந்துள்ளார். 1965 பாேர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1971 போரில் அவர் காயமும் அடைந்தார். புனேவில் வசித்து வந்த தார் (88), முதுமை காரணமாக காலமானார்.
Similar News
News February 23, 2025
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஏழைகளின் ஆப்பிள்

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால், அதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில் 24% ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்புக்கு பேரிக்காய் பேருதவியாக இருக்கிறது.
News February 23, 2025
ஐ.எஸ்.எல் தொடர்: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 13 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இன்றைய வெற்றியின் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
News February 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 187
▶குறள்:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
▶பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.