News November 17, 2024
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களின் கவனத்திற்கு…

வேலையின் காரணமாக நீண்ட நேரம் அமர்ந்தே படியே இருப்பவர்களுக்கு உடலில் பல பிரச்னைகள் உண்டாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து 1,000 பேரிடம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு விரைவில் உடலில் முதுமை ஏற்பட்டு இதய நோய், மனநலப் பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள். வேலைக்குப் பிறகு தீவிர நடைப்பயிற்சி தேவை என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News August 27, 2025
பிஹாரிகள் தாக்கப்படும் போது ஸ்டாலின் எங்கே போனார்? PK

தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News August 27, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
அதிமுக கூட்டணியில் விஜய்: RB உதயகுமார் சொல்வதென்ன?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என ஆர்.பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டுமென்றார். திமுகவை வீழ்த்த கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும் போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என்றார். முதல்வராக வேண்டும் என்பதற்காக தவெக தொண்டர்களின் உழைப்பு, எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என்றார்.