News April 21, 2025
இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக!

லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் WWE – Wrestlemania 41-ல் நடிகர் ராணா டகுபதி கலந்து கொண்டுள்ளார். இந்திய பிரபலம் ஒருவருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறுவயதில் இருந்தே WWE ரசிகனான தனக்கு, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை நம்பமுடியவில்லை என ராணா நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
ஆதார் கார்டு முதன்மை அடையாளம் அல்ல: UIDAI

ஆதார் கார்டு ஒருபோதும் ஒரு நபரின் முதன்மை அடையாள அட்டை அல்ல என்று UIDAI சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிய புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புதிதாக வழங்கப்படும் ஆதார் கார்டுகளில் உள்ள QR கோடைப் பயன்படுத்தி, இந்த ஆப் மூலம் போலியானதைக் கண்டறியலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News July 9, 2025
கோட்சே வழியில் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது: ஸ்டாலின்

காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்லாமல், கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பேசிய அவர், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம் என்றார். தமிழகத்தைக் காக்க மாணவர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
News July 9, 2025
அபார்ட்மென்டில் அழுகிய நிலையில் கிடந்த நடிகை!

பாகிஸ்தான் பிரபல நடிகையும், மாடலுமான ஹுமாயிரா அஸ்கர்(32) கராச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஹுமாயிராவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ‘Jalaibee’, ‘Aik Tha Badsha’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹுமாயிரா நடித்துள்ளார். #RIP