News April 21, 2025
இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக!

லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் WWE – Wrestlemania 41-ல் நடிகர் ராணா டகுபதி கலந்து கொண்டுள்ளார். இந்திய பிரபலம் ஒருவருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறுவயதில் இருந்தே WWE ரசிகனான தனக்கு, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை நம்பமுடியவில்லை என ராணா நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
PAK-ஐ கூடுதலாக அடித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு இன்னும் கூடுதலான இழப்புகளை நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நமது படைகள் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான இழப்புகளை மட்டும் ஏற்படுத்தின. இந்த வெற்றிக்கு ராணுவம், நிர்வாகம், எல்லைப்புற மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். இந்த பன்மைத்துவம் தான் உலகில் நம்மை தனித்துவமாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
₹500 கோடி கொடுத்தால் CM தான் ஆக முடியுமா?

₹500 கோடி கொடுத்தால் பஞ்சாப் CM ஆக முடியும் என அம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். ஆனால், பணம் கொடுப்பவர்கள் தான் CM வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தனது கணவரை CM வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அவர் அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்றும் கவுர் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 8, கார்த்திகை 22 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 1.45 PM – 2.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9.15 AM – 10:15 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


