News April 28, 2025

தோனியின் வரலாற்றில் முதல் முறையாக…

image

நடப்பு ஐபிஎல் தொடரில் CSK கடைசி இடத்தில் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது மிகவும் சிரமம். அப்படி தகுதி பெறாவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோனி இல்லாமல் நடைபெறும் IPL final இதுவாகத்தான் இருக்கும். 2008-ம் ஆண்டு IPL தொடங்கியது முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அவர் இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டும் CSK ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை.

Similar News

News July 11, 2025

என்ன பயணம் போனாலும் இலக்கை அடைய மாட்டார்

image

இபிஎஸ், பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாக மாறிவிட்டார் என CM ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர், கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷன் என தமிழகமே பார்க்காத அவல ஆட்சியை நடத்தியதாகக் கடுமையாக விளாசினார். தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று கூறும் கூட்டத்துடன் சேர்த்த அவர், எந்தப் பயணம் போனாலும் இறுதியில் இலக்கை அடைய மாட்டார் என விமர்சித்தார்.

News July 11, 2025

B,Pharm 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான B.Pharm 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. D.Pharm படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் ஜூலை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் <>www.tnmedicalselection.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

News July 11, 2025

BREAKING: பள்ளி முதல்வர் அதிரடி கைது!

image

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தானேவில் உள்ள RS தமானி பள்ளியில் நடந்துள்ளது. கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் அதனை செய்தது யார் என்பதை அறிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட், பெண் ஊழியர் நந்தா இருவரும் நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் பெண்களா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர்.

error: Content is protected !!