News March 17, 2024
மதுரையில் உணவு திருவிழா

மதுரை, அவனியாபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் சைனீஸ் உணவுத் திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் “மடிராகன் ஃபீஸ்டா” என்ற தலைப்பில் 1000 ஆண்டுகள் பழமையான உணவுகளை இன்றும் சமைத்து அசத்தியுள்ளனர். சைனா நாட்டை சேர்ந்த பாரம்பரிய சுமார் 200 வகையான உணவுகளை சமையல் வல்லுநர்கள் சமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
Similar News
News January 4, 2026
மதுரை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

மதுரை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 4, 2026
பொங்கல் விழா – மதுரை கலெக்டர் அறிவிப்பு!

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா ஜன.14ல் மதுரை மாவட்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெறுகிறது. அன்று காலை 8:00 மணிக்கு மதுரை சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு பேருந்து மூலம் சத்திரப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு.
News January 4, 2026
மதுரை: தந்தை கண்டித்ததால்… சிறுவன் தற்கொலை

மதுரை பசுமலையை சேர்ந்தவர் முனியாண்டி மகன் லோகேஷ் (15). இவர்
பசுமலையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் நண்பர்கள் அவரை கிரிக்கெட் விளையாட அழைத்துள்ளனர். இதை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் லோகேஷ் வீட்டில் இன்று சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


