News January 16, 2026
FLASH: பொங்கல் விடுமுறை.. கூடுதலாக ஒரு சிறப்பு ரயில்!

பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை இயக்கிவரும் தெற்கு ரயில்வே நாகர்கோவில் – தாம்பரம் இடையே கூடுதலாக ஒரு ரயிலை(06160) அறிவித்துள்ளது. இது, ஜன.18-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக திங்கட்கிழமை காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு <
Similar News
News February 5, 2026
ஜன நாயகன் விரைவில் ரிலீஸ்: சிவகார்த்திகேயன்

சென்சார் விவகாரத்தால் தள்ளிப்போன ‘ஜன நாயகன்’ படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஜன நாயகன் படம் விரைவில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 2-வது முறையாக ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து SK பேசியுள்ளது, ‘பராசக்தி’ பட ரிலீஸின்போது இருதரப்பு ரசிகர்களுக்கிடையே இருந்த பனிப்போருக்கு முடிவுகட்டும்படி உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 5, 2026
அண்ணாமலை MLA ஆகனும்: வானதி சீனிவாசன்

பாஜகவின் தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, தலைமை சொல்லும் வேலையைச் செய்வேன் என கூறியிருந்தார். இந்நிலையில், சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்களது எல்லோரின் விருப்பம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். <<19054656>>அண்ணாமலை<<>> தேர்தலில் போட்டியிடுவதில் கட்சியினுள் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் வானதி இவ்வாறு கூறியுள்ளார். எந்த தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம்?
News February 5, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி விடுமுறையையொட்டி மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். நீங்கள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக 725 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உடனடியாக இங்கே <


