News February 23, 2026
FLASH: சிவகங்கை 200 ஆண்டு தண்டனை அதிரடி தீர்ப்பு..!

சிவகங்கை தோஷம் கழிப்பதாக கூறி இரண்டு சிரமங்களை பாலில் வன்கொடுமை செய்தவருக்கு 200 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் 2001ல் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ராமகிருஷ்ணன் குற்றவாளி 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News March 1, 2026
சிவகங்கை: பைக் விபத்தில் கொத்தனார் பலி

சிவகங்கை மாவட்டம், பனங்காடி சாலையைச் சேர்ந்தவர் வன்னிமுத்து (48). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் ராமநாதபுரத்தை சேர்ந்த ரவி என்பவருடன் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் வன்னிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 1, 2026
சிவகங்கை: மாடு மிதித்து மாணவன் உயிரிழப்பு

கிருங்காகோட்டை பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் பவித்ரன் நேற்று முன் தினம் தனது உறவினருடன் நெற்குப்பையில் உள்ள ஒருவரது வீட்டிற்கு மாடு ஒன்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது பவித்ரன் திடீரென மாட்டின் அருகில் தவறி விழுந்தான். மாடு மிதித்ததில் படுகாயமடைந்த மாணவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News March 1, 2026
இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (28.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது


