News August 8, 2024
தாமிரபரணி கரையில் மீன் சின்ன கல்வெட்டு

தாமிரபரணி கரையில் மீன் சின்னத்துடன் கல்வெட்டு இன்று (ஆக.8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாளை தருவை அருகே தாமிரபரணியில் பச்சையாறு இணையும் பகுதியில் கல் மண்டபம், அதில் மீன் சின்னங்களுடன் கல்வெட்டு உள்ளது. இதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்த ஆய்வு நடக்கிறது.
Similar News
News December 7, 2025
நெல்லை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

நெல்லை மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <
News December 7, 2025
நெல்லை: இளைஞரிடம் ரூ.24 லட்சம் நூதன மோசடி

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த விஜயசுந்தர் (30), மேட்ரிமோனி தளத்தில் அறிமுகமான அகல்யா சேகர் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு முதலில் ரூ.10,000 முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளார். இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து ரூ.24.05 லட்சம் செலுத்தினார். பணத்தை திரும்ப எடுக்க முயலும்போது மேலும் பணம் கேட்டதால் ஏமாற்றம் அடைந்து நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை.
News December 7, 2025
நெல்லை: லட்சக் கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்

நெல்லை மாவட்டம் (5 தொகுதிகள்) – நேற்றைய நிலவரப்படி பழைய /போலி / இறந்த பெயர்கள் நீக்கம்:
நெல்லை: 42,406 (13.87%)
அம்பை: 43,832 (16.83%)
பாளை: 36,559 (13.07%)
நாங்குநேரி: 55,966 (18.75%)
ராதாபுரம்: 44,011 (16.08%)
மொத்தம் நீக்கம்: 2,22,774 வாக்காளர்கள் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


