News August 20, 2024

அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டியவர்கள் மீது FIR

image

கிருஷ்ணகிரியில் ஆட்டை நடுரோட்டில் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, திமுகவை சேர்ந்த சிலர் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து நடுரோட்டில் வெட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Similar News

News April 2, 2026

விவசாய கடன் தள்ளுபடி: திமுக கூட்டணி புதிய விளக்கம்

image

அதிமுக, விவசாய தள்ளுபடிக்கு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், திமுகவின் வாக்குறுதியில் அது இடம் பெறாததால் பேசு பொருளானது. இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டாலினிடம் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். அப்போது, புதிய கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பதாலேயே திமுக வெளியிட்ட வாக்குறுதியில் அவை இடம்பெறவில்லை என ஸ்டாலின் கூறியதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

News April 2, 2026

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் சின்னம்மை!

image

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் 500-க்கும் மேற்பட்டோர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 476 பாதிக்கப்பட்டுள்ளார்கள். மதுரையில் 96 பேரும், திருப்பத்தூரில் 50 பேரும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

News April 2, 2026

நிர்மல் குமாருக்கு ஒரு கொய்யா கூட கிடைக்காது: KTR

image

தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என CTR நிர்மல்குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில், தவெகவில் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்த்துச் சென்ற நிர்மலுக்கு ஒரு கொய்யாப்பழம் கூட கிடைக்காது என்று KT ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். விரைவில் அவர் அதிமுகவுக்கு திரும்புவார் என்றும், தவெக வேட்பாளர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் தான் அரசியல் செய்வதாகவும் சாடினார்.

error: Content is protected !!