News September 9, 2024
மக்கள் அச்சப்பட வேண்டாம்

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். இருப்பினும், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனே பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 19, 2025
நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, MP கனிமொழி சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை முதல் 2 நாள்கள் நடைபெறவுள்ள GST கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பிலான முக்கிய கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர். இந்த GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
News August 19, 2025
ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் புறக்கணிப்பா ? ரசிகர்கள் ஷாக்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் ஷ்ரேயஸ் 604 ரன்கள், ராகுல் 539 ரன்கள் குவித்த பிறகும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் இருவரும் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News August 19, 2025
பாஜக பாணியிலேயே பதிலடி கொடுத்த காங்கிரஸ்

நாட்டின் து.ஜனாதிபதி தேர்தலில் பிராந்திய அரசியலை கையில் எடுத்துள்ளன அரசியல் கட்சிகள். து.ஜனாதிபதி வேட்பாளராக தமிழரான CPR-ஐ தேர்ந்தெடுத்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பாஜக. இதனையடுத்து பாஜக பாணியில் தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் செக் வைத்துள்ளது.