News April 9, 2024
தோனிக்கு சிலை வைக்கக்கோரி பேனருடன் வந்த ரசிகர்கள்

தோனிக்கு சிலை வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தோனியின் புகைப்படத்துடன் கூடிய பேனரை எடுத்துவந்த சிஎஸ்கே ரசிகர்கள், தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Similar News
News August 11, 2025
மழைக்காலத்தில் இருமல் பிரச்சனையா?

மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
*தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். *உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, இருமல் தீரும். *சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இதை இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.
News August 11, 2025
உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
News August 11, 2025
கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!