News April 1, 2025
FACTCHECK: நித்தியானந்தா மரணம்?

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக இரண்டு நாள்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேரலையில் பேசிய அவரது சகோதரி மகன், சுவாமிஜி இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால், வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் இப்படி நாடகமாடலாம் என்ற பேச்சும் எழுகிறது. எனவே, அவரது மரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
Similar News
News July 5, 2025
கண் பார்வைக்கு கேரட்டை விட இது பெஸ்ட்

கண் பார்வைக்கு இந்த 5 உணவுகளை நீங்கள் உணவில் சேர்ந்தால் போதும் மக்களே. *எல்லா வகையான கீரைகளும் கண்ணுக்கு நல்லது *மத்தி உள்ளிட்ட கொழுப்பு அதிகமுள்ள மீன்களை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும் *நட்ஸ் பார்வையை மேம்படுத்த உதவும் *கட்டாயம் உங்கள் உணவில் முட்டையை சேர்க்க வேண்டும் *ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் கொண்ட உணவுகள் கண்ணுக்கு சிறந்தது. நல்லா சாப்பிடுங்க கண் பத்திரம்…
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
‘MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்க’

50 கிலோ வாட் வரை கட்டண உயர்வில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறு நிறுவனங்கள் 120 கிலோ வாட் வரை பயன்படுத்துவதால் இந்த அறிவிப்பு உதவாது என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் தெரிவித்தன. கோவையில் பேட்டியளித்த இந்த அமைப்பினர், MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சூரிய மின்சக்தி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.