News September 27, 2025

அட்டர்னி ஜெனரலின் பதவி காலம் நீட்டிப்பு

image

இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியின் பதவி காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். வரும் 30-ம் தேதியோடு அவரது பதவி காலம் முடிவடைய இருந்தது. நாட்டின் எந்த கோர்ட்டிலும் ஆஜராகும் உரிமை அட்டர்னி ஜெனரலுக்கு உண்டு. அரசாங்க வழக்குகளை கையாள்வதோடு, சிக்கலான சட்டப் பிரச்னைகள் குறித்தும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவார். வெங்கட்ரமணி புதுச்சேரியில் பிறந்தவர் ஆவார்.

Similar News

News September 27, 2025

BREAKING: கரூரில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.
ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து ஹாஸ்பிடலை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

News September 27, 2025

விஜய் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது: பொன்னார்

image

அதிமுக – பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விஜய் விமர்சித்ததை பொன்.ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். விஜய் இன்று பிறந்த குழந்தை எனவும், இந்த விஷயத்தை இத்துடன் விடுவது அவருக்கு நல்லது என்றும் எச்சரித்துள்ளார். அதேபோல், விஜய்யின் பிரசாரம் அரசியல் போன்று இல்லை, அவர் சினிமாவில் நடிப்பது போலவே உள்ளதாகவும், அவருக்கு அரசியல் தெரியுமா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 27, 2025

அசம்பாவிதங்களுக்கு விஜய் பொறுப்பேற்பாரா?

image

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பான வீடியோக்கள் பதற வைக்கின்றன. தவெகவின் கூட்டங்களுக்கு மட்டும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக சமீபத்தில் தான் அக்கட்சி ஐகோர்ட்டை நாடியது. அப்போது, பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தபட்ட கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்றைய அசம்பாவிதத்திற்கு விஜய் பொறுப்பேற்பாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!