News March 19, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.

Similar News

News July 5, 2025

மதம் கடந்த மனிதநேயம்

image

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவமான பண்பாகும் அதனை உணர்த்தும் வகையிலான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 60 லட்சம் பணம் தேவைப்பட்டது. இதனால் பயாஸ் என்பவரின் உதவியை நாடினார் பூசாரி. சிறுமி நிலை பற்றி இணையத்தில் வீடியோ வெளியிட்ட பயாஸ், 16 1/2 மணி நேரத்துக்குள் 75 லட்சம் வசூலித்து பூசாரியிடம் வழங்கியுள்ளார்.

News July 5, 2025

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

image

மதுரை மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர் தீபன் ராஜ் தனது காதலியான 19 வயது பெண்ணை தனிமையில் அழைத்துவிட்டு நெருக்கமாக இருந்துள்ளார். இதனையடுத்து, தீபன் ராஜின் உதவியுடன் அவரது நண்பர்களான மதன், திருமாறன் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News July 5, 2025

Dude படத்தின் டிஜிட்டல் உரிமம் பல கோடிகள்..!

image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவரது லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் 100 கோடி வரை வசூலித்தது. இந்நிலையில் தற்போது DUDE எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிஜிட்டல் உரிமைத்தை முன்னணி நிறுவனம் ஒன்று 25 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான பிரதீப் படங்களின் டிஜிட்டல் உரிமம் இவ்வளவு தொகைக்கு விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!