News March 19, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
Similar News
News December 29, 2025
விஜய் கதையில் பிரதீப் ரங்கநாதன்?

கடைசியாக ’லவ் டுடே’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அப்போதே விஜய்யை சந்தித்து Science Fiction கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் கதை கொஞ்சம் மாற்றி எழுதி, தற்போது பிரதீப் ரங்கநாதனே அதில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. LIK படத்தின் ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News December 29, 2025
30 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை.. ஆனந்தத்தில் கிராமம்

இத்தாலியின் Pagliara dei Marsi என்ற கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. 20 பேர் மட்டுமே இருந்த ஊரில் ஸ்கூல்கள் மூடப்பட்டன, எங்கு பார்த்தாலும் முதியவர்கள் மட்டுமே காணப்பட்டனர். ஏன் இந்த கொடுமை என மனம் துவண்டு போனவர்களுக்கு, நம்பிக்கையை கொடுக்கும் விதமாக லாரா என்ற பெண் குழந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் பிறந்துள்ளது. குழந்தையின் வருகையை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
News December 29, 2025
BREAKING: பாமக புதிய தலைவர் அறிவிப்பு

பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து, சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயல்தலைவராக காந்திமதி, கெளரவ தலைவராக ஜி.கே.மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2026 தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


