News October 16, 2025
MLA சீட் கொடுத்தாலும் வேண்டாம்: மாரி செல்வராஜ்

அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த குறைந்தபட்சம் 15 கதைகளை படமாக்க விரும்புவதாக கூறிய அவர், வரும் தேர்தலில் MLA சீட் கொடுத்தாலும் வேண்டாம் என்றார். அதேநேரம், பா.ரஞ்சித் அரசியலுக்கு வருவார் என்றும், அவர் எதையும் தைரியத்துடன் செய்யக் கூடியவர் என்றும் மாரி கூறியுள்ளார்.
Similar News
News October 16, 2025
LSG அணியில் இணைந்தார் கேன் வில்லியம்சன்!

LSG அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் தலைமையிலான அணியில் அவர் ஹெட் கோச் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து வியூகங்களை வகுக்கவுள்ளார். 2018, 2019 & 2021-ம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளதால், கேன் வில்லியம்சன் வருகை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என LSG நிர்வாகம் நம்புகிறது.
News October 16, 2025
தீபாவளி விடுமுறை.. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையிலிருந்து 760 சிறப்பு பேருந்துகள், பிற மாவட்டங்களுக்கு இடையே 565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மழைகாலம் தொடங்கிவிட்டதால், தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் உடனே புக்கிங் செய்யவும்.
News October 16, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (அக்.16) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து 82,972 புள்ளிகளிலும், நிஃப்டி 109.10 புள்ளிகள் அதிகரித்து 25,433 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ITI, Whirlpool, Titan ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், HDFC Life Insurace உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.