News March 16, 2024

திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

image

திருச்சி விமான நிலையம் இன்று வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News July 6, 2025

திருச்சி: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சில உரக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மானிய உரங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ததில், 4 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

திருச்சி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை (0431- 2460823) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…

error: Content is protected !!