News May 7, 2025
போதும் தோனி இதோட நிறுத்திக்கலாம்.. ஆஸி., வீரர்

தோனி நடப்பு IPL சீசனுடன் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும், இனிமேலும் அவர் கிரிக்கெட் உலகில் நிரூபிக்க ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளார். அணியின் நலன் கருதி அவர் விடைபெறுவது சிறப்பாக இருக்கும் என தோனி பற்றி கில்கிறிஸ்ட் குறிப்பிட்டுள்ளார். தோனி அடுத்த சீசன் விளையாடணுமா? நீங்க சொல்லுங்க…
Similar News
News July 11, 2025
தேர்தல் கூட்டணி.. 40 MLA-க்கள்.. ராமதாஸுன் வியூகம் என்ன?

2026 தேர்தலை கூட்டணியுடன் சந்திப்பதாக கூறிய ராமதாஸ் பாமகவுக்கு 40 MLA-க்கள் இருந்தால் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை யாரிடமும் சென்று கேட்க வேண்டிய அவசியமில்லை என பேசியுள்ளார். கடலூர் வன்னியர் சங்க கூட்டத்தில் பேசிய அவரது இந்த பேச்சு அரசியல் களத்தை சூடுபடுத்தியுள்ளது. இதன் மூலம் கூட்டணியில் அவர் 40 தொகுதிகளை குறிவைக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News July 11, 2025
வரும் 18-ம் தேதி OTT-ல்….

தனுஷ், நாகர்ஜுனா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘குபேரா’ படம் வரும் 18-ம் தேதி அமேசான் பிரைம் OTT-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் படம் வெளிவருகிறது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், DSP இசையில் கடந்த ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று ₹134 கோடியை வசூலித்தது.
News July 11, 2025
‘ராமதாஸை’ விடாத அன்புமணி

பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 2 பேருக்கும் சமாதானம் செய்ய நடந்த முயற்சி தோல்வியில் முடிவடைய, தன் பெயரை இனி அன்புமணி தன் பெயருக்கு பின்னால் போடக் கூடாது என ராமதாஸ் தடை விதித்தார். எனினும் இதை கண்டுகாெள்ளாத அன்புமணி, கட்சியினருக்கு எழுதிய கடிதம், அறிக்கையை அன்புமணி ராமதாஸ் என்ற பெயரிலேயே வெளியிட்டார்.