News October 11, 2025
எம்மாடியோவ்.. இந்த படம் பார்த்த ஞாபகம் இருக்கா?

‘தெய்வீக வெற்றி’ என்ற மகிழ்ச்சியுடன் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது ‘காந்தாரா: சாப்டர் 1’. குலதெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு உருவான இப்படத்தை மொழி கடந்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நாம் பார்த்து வளர்ந்த சில பக்திப் படங்கள் மேலே போட்டோஸாக உள்ளது. அவற்றில் நீங்கள் பார்த்து Goosebumps ஆன படம் எது என்று கமெண்ட் பண்ணுங்க. இதில் விடுபட்ட படங்களின் பெயரையும் சொல்லுங்க.
Similar News
News October 11, 2025
சர்க்கரை நோயா? இந்த ஜூஸ்களை குடிங்க

*நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முறை பாகற்காய் ஜூஸ் குடித்தால், உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். *நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. மேலும், இதனை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். *அதேபோல், மாதுளை, கேரட், தக்காளி தர்பூசணி, சாத்துக்குடி போன்ற ஜூஸ்களையும் அருந்தலாம்.
News October 11, 2025
ஒரே நாளில் ₹5,000 வரை அதிகரித்தது.. மக்கள் தவிப்பு

தீபாவளியையொட்டி ஆம்னி பஸ் டிக்கெட் விலை ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை – நாகர்கோவில் செல்ல ₹5,200, சென்னை – நெல்லை செல்ல ₹4,850 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. அதேநேரத்தில், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
News October 11, 2025
என்னை பற்றி பேசுவதில்லை: சீமான்

விஜய் பற்றி 24 மணிநேரமும் பேசும் ஊடங்கங்கள், 24 மணி நேரமும் பேசும் தன்னை பற்றி எதுவும் பேசுவதில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். விஜய்யை தான் எதிர்க்கவில்லை என கூறிய அவர், கேள்வி எழுப்பினாலே எதிர்ப்பதாக சித்தரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னை பார்க்க வரும் கூட்டம் ரசிகர்கள் கூட்டம் இல்லை என்ற சீமான், நாதக தொண்டர்கள் கருத்தியல் மணிகள் என கூறியுள்ளார்.