News October 11, 2025

என்னை பற்றி பேசுவதில்லை: சீமான்

image

விஜய் பற்றி 24 மணிநேரமும் பேசும் ஊடங்கங்கள், 24 மணி நேரமும் பேசும் தன்னை பற்றி எதுவும் பேசுவதில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். விஜய்யை தான் எதிர்க்கவில்லை என கூறிய அவர், கேள்வி எழுப்பினாலே எதிர்ப்பதாக சித்தரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னை பார்க்க வரும் கூட்டம் ரசிகர்கள் கூட்டம் இல்லை என்ற சீமான், நாதக தொண்டர்கள் கருத்தியல் மணிகள் என கூறியுள்ளார்.

Similar News

News December 16, 2025

திருவள்ளூர் கலெக்டர் தொடங்கினார்!

image

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News December 16, 2025

21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

image

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த மழை வரும் 21-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், இன்று வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் IMD கூறியுள்ளது.

News December 16, 2025

அதிமுகவில் இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி

image

அதிமுகவில், 349 மனுக்கள் EPS தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். முதல் நாளில் மட்டும் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், EPS-க்கான இந்த வரவேற்பு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!