News April 28, 2025
இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
Similar News
News January 15, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 14.01.2026 முதல் இரவு ரோந்து காவல்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. DSP எம்.எஸ். ரூபன்குமார் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். குற்றச்செயல்கள் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
News January 15, 2026
நம்பர் 1-ல் சிங்கப்பூர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

2026-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா 2-வது இடத்தில் உள்ளன. பட்டியலில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025-ல் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, 5 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும், தற்போது இந்தியர்கள் 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 15, 2026
ராசி பலன்கள் (15.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். அதிலும், நாளை பொங்கல் தினத்தில் உங்களுக்கான ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


