News August 23, 2025
கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதீங்க பாஸ்!

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?
Similar News
News March 16, 2026
திருவள்ளூர்: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI
News March 16, 2026
நீங்க Induction ஸ்டவ்வை பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் Induction ஸ்டவ்வை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சில விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது. *சமைக்க ஸ்டீல் பாத்திரங்களையே பயன்படுத்துங்கள். *அடுப்புக்கு கீழிருக்கும் மின்விசிறி அருகே எதுவும் வைக்காதீர்கள். *அடுப்பின் மீது தண்ணீர் சிந்தினால் அடுப்பை அணைத்தவுடன் சுத்தம் செய்யுங்கள். *அடுப்பின் மீது பாத்திரங்களை தேய்க்காமல் தூக்கி பயன்படுத்துங்கள். *அடுப்பிற்கு அருகில் மொபைல் போனை வைக்காதீர்கள்.
News March 16, 2026
விலை குறைந்தது.. காலையிலேயே மகிழ்ச்சி

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய (மார்ச்-16) நிலவரப்படி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளது. அதேநேரம் வெங்காயம் ₹20,தக்காளி ₹22, உருளைக்கிழங்கு ₹25, கத்தரிக்காய் ₹32,சுரைக்காய் ₹36, புடலங்காய் ₹35 உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.


