News March 29, 2024
போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்

வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
Similar News
News January 1, 2026
நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 1, 2026
நியூ இயரில் இந்த தவறை பண்ணாதீங்க!

புது வருடம் பிறந்துவிட்டது. இந்த எண்ணம் மனதில் இருந்தாலும், தேதி எழுதும் போது ஏனோ 1/1/25 என சட்டென எழுதி விடுவோம். ஆபீஸ் File-ல் தொடங்கி, ஸ்கூல் நோட்புக் வரை அனைத்திலும் தவறாக எழுதிவிட்டு, அடுத்த கணமே ‘அய்யயோ தப்பாயிடுச்சே’ என அடிச்சி திருத்துவோம். நாள்கள் மாறிவிட்டதை சரியாக கவனித்தாலும், நமது கைகள் ஏனோ இந்த விஷயத்தில் தவறிழைத்துவிடுகிறது. நன்றாக நினைவில் வெச்சிக்கோங்க.. இனி வரப்போவது 2026!
News January 1, 2026
BREAKING: பொங்கல் போனஸாக ₹3,000 அறிவித்தார் CM ஸ்டாலின்

TN அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை( 2024 – 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம்) CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குரூப் சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலா ₹3,000 மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ₹1,000 பொங்கல் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹183.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.


