News April 18, 2025
BED-ல் இதை செய்யாதீங்க

நம்மில் பலரும் BED-ல் ஈர டவலைப் போட்டுவிட்டு கண்டுக்காமல் சென்று விடுகிறோம். ஆனால் இதனால் கிருமி உண்டாகி, BED-லிலும், படுக்கை விரிப்பிலும் வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லை, நமது உடலிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர். வெளியில் இருந்து வந்து கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு செல்வதும் உடல்நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
Similar News
News January 9, 2026
ஜனநாயகன் பிரச்னை இன்று முடிவுக்கு வருமா?

தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக இன்று வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமாக அமைந்தால் படம் பொங்கலுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. உள்நோக்கத்துடனேயே சென்சார் போர்டு செயல்படுவதாக கோர்ட்டில் ‘ஜனநாயகன்’ படக்குழு வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 9, 2026
தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுக – பாஜக ஆலோசனை

அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து நேற்று முன்தினம் அமித்ஷாவுடன் EPS முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று EPS-ஐ அவரது வீட்டில் வைத்து நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், பரப்புரை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
News January 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 9, மார்கழி 25 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்:9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


