News October 20, 2025

நாளை மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்

image

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 6 – 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்களிலோ பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 22, 2026

பிரேமலதாவுக்கு புது அதிர்ச்சி.. கூட்டணியில் பரபரப்பு

image

திமுக கூட்டணியில் 10-க்கும் குறைவான சீட்டுகளை பெற்றால் பதவி விலகுவோம் என தேமுதிக தலைமைக்கு மாவட்டச் செயலாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது, பிரேமலதாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் தேமுதிகவுக்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 22, 2026

தவெகவில் தஞ்சம் புகும் அரசியல் பிரமுகர்கள்

image

புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளில் சீட் கிடைக்காத பிரமுகர்கள் தவெகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனராம். பாஜக Ex MLA சாமிநாதன், அதிமுக Ex MLA பெரியசாமி மற்றும் அசனா, காங்., Ex MLA தனவேலு என இருந்து சமீபத்தில் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொது செயலாளர் ஆனந்த் முயற்சியில் மேலும் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 22, 2026

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கால அவகாசம்

image

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. இந்த <>இணையதளத்தை<<>> பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ள முடியும். பெயர் இல்லையென்றால் விரைந்து விண்ணப்பிக்கவும். படிவம் 6ஐ பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். உதவிக்கு ECINet செயலியை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!